
கொழும்பில் அடாவடித்தனம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடயில் வைத்து மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
யுவதி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரின் மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட – மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரின் மகன் உட்பட சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணவீர நாடாளுமன்றத்தில் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.