சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் 2022 ஆண்டுக்கான கூட்டங்கள், அக்டோபர் 10 திங்கள் முதல் அக்டோபர் 16 ஞாயிறு வரை நடைபெறவுள்ளன.
இந்த கூட்டங்கள்,வோஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைமையகங்களில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டு நிகழ்வுகளுக்கு பிரதிநிதிகள் குழுவை அனுப்ப இலங்கை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை தாங்குவார் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதிச் செயலாளர் மற்றும் பலர் அவருடன் செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் வருடாந்த கூட்டங்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பதில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.