ழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக மணல் அகழ்ந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு டிப்பர்களும் நேற்று 28.09.2022 கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை, உழவனூர், மற்றும் கல்லாறு பகுதிகளில் இடம் பெற்றுள்ளது.


சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் பொலீசார் நான்கு டிப்பர் வாகன சாரதிகளை கைது செய்துள்ளதுடன் நான்கு டிப்பரஸ வாகனங்களையும் கையகப்படுத்தியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 4பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தடையப் பொருட்கள், மற்றும் வாகனங்கள் என்பன நாளை யதினம் (28.09.2022) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.