தகவல் அறியும் உரிமைச் சட்டம் வடக்கு மாகாணத்தில், தனது பணிகளை முழுமைப்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை நெறி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசால் பல சட்டங்கள் கொண்டு வரப்படும். அவை அநேகமானவை மக்களுக்கு நன்மை தரும் விடயமாக இருந்தாலும், சில சட்டங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை தற்போது வரை பாதிக்கிறது. பயங்கரவாத தடை சட்டம் வடக்கு கிழக்கு மட்டும் அல்ல, தற்போது தெற்கையும் பாதித்துள்ளது. அரசியல் கைதிகள் தொடர்பில் தெளிவான நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஓரளவு மக்களுக்கு சார்பாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மக்களிடம் நாம் இந்தச் சட்டம் தொடர்பில் வினாவினால், சிலர் மட்டுமே கைகளை உயர்த்துவார்கள். இந்தச் சட்டம் எமக்கு கிடைத்த வரம். அதை நாம் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . பலருக்கு இது பற்றி தெரியவில்லை. அதற்கு அரச இயந்திரமும் உதவி செய்ய வேண்டும்.
14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு அரச மட்டத்தில் ஆவணமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கணனி மயப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இணையத்தளங்கள், விளம்பர பலகைகள், வேகமாக அப்டேட் செய்யப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசுக்கு சொந்தமான பல இணையத்தளங்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை.
இது தவிர ஒரு அலுவலகத்தில் உள்ள RTI அலுவலர்,தனது பணிக்கு மேலதிகமாக, ரதி அலுவலகராக நியமிக்கப்படுள்ளார் . ஆகவே பணிச்சுமை காரணமாக தகவல்கள் வழங்குவதில் சிரமம் காணப்படுகிறது. ஆகவே இவை சீர்செய்யப்பட வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக தனியார் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை அறிதில் இழுபறி நிலை காணப்படுகிறது.
மேன் முறையீடுகள், வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டும் . தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அதிகாரங்கள் மாகாணத்துக்கு வழங்க வேண்டும். தகவலை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இந்த சட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . அரச அலுவலகம் தாமாகவே முன்வந்து தகவல்களை விரைவில் வழங்க கூடிய வகையில் நடைமுறைகள் கொண்டு வரப்படநிலை காணப்படுகிறது.
மேன் முறையீடுகள் , வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டும் . தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அதிகாரங்கள் மாகாணத்துக்கு வழங்க வேண்டும். தகவலை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
பாடசாலை மட்டத்தில் இந்த சட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரச அலுவலகம் தாமாகவே முன்வந்து தகவல்களை விரைவில் வழங்க கூடிய வகையில் நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் . என்றார் வேண்டும் என்றார்.