திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
வாரத்தில் ஒரு முறை கியூ ஆர் கோட் மூலமாக 5 லீட்டர் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது ஜீவனோ பாயத்தை உயர்த்திக்கொள்ள முடியாத நிலையில் நாளுக்கு நாள் கடனாளியாகவே உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாக சாரதிகள் தவணைப்பணம் கட்டுவதற்காக கிடைக்கின்ற பணத்தில் ஒதுக்குவதாகவும், உண்பதற்கு போதிய அளவு பணம் இல்லாமையினால் பல குடும்பங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் மானிய அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆகவே அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளின் நலன் கருதி மானிய அடிப்படையில் சில உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.