இலங்கையில் 80 வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 34 வீதமானவர்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் மருந்துவர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.

கழுத்தின் ஓரங்களை அழுத்துவது போல் கடுமையான வலி, கையின் மேலிருந்து கீழாக ஏற்படும் வலி, வயிற்றில் கடுமையான வலி, தோள்களில் வலி என்பன மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நோய் நிபுணர் மருத்துவர் சம்பத் விதானவாசம் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்வது கட்டாயமாகும் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.  மேலும் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அது இதயத்தின் பாதிப்பை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.

இன்று உலக இருதய தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin