உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. உலக சிறுவர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று புதன்கிழமை(28) மாலை நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளியில் வைத்து சிறார்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முன்பள்ளியின் ஆசிரியர்களான தவசீலன் கிரிசா மற்றும் சுகிர்தன் விஜிதா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்க ஆகியோர் இணைந்து முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் இராஜகிராம அபிவிருத்தி குழு தலைவி அருமைத்துரை சறோஜினி மற்றும் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர் பொலிசார் கலந்து கொண்டிருந்தனர்.