
வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி இளைஞர்களால் பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன் தினமும், நேற்றும் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் 2500 பனை விதைகளும் நேற்று 1500 பனை விதைகளுமாக மொத்தம் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன.




குறித்த பனை விதைகள் நாட்டும் பணி தன்னார்வமாக கேவில் பிரதேச இளைஞர்களால் அரச மற்றும் தனியார் காணிகளில் தரவையாக காணப்பட்ட பகுதிகளிலேயே நாட்டப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தம்மால் பனை விதைகள் நாட்டும் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.