பலர் தற்கொலை செய்கின்றார்கள் பலர் நோய்வாய்ப்படுகின்றார்கள், குடும்பங்களிலே பிரச்சனை பெற்றோர்கள் கவலையோடு இருக்கின்றார்கள்
ஆனபடியால் இந்த நிலை வர வர மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றதுயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூட இது பற்றி சொல்லியிருந்தார் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக இந்த போதைப் பொருள் பாவனை அதிகரித்து இருக்கின்றது
ஆகவே இதனை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது நாங்கள் எல்லாருமாக இணைந்து இதற்கு எதிராக போராட வேண்டும் எங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்
இது ஒரு சிலர் மட்டும் செய்கின்ற ஒரு வேலையாக இருந்தால் அது முடியாது அனைவரும் இணைந்து அதாவது மதத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் எல்லாரும் ஒன்றிணைந்து நாங்கள் இதற்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தினை நடாத்தி எங்களுடைய சந்ததியை பாதுகாக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.
அதனை யாரும் தட்டுக்களிக்காமல் இதனை செய்ய முடியாது என்று அதனை விட்டு விடாது இது கட்டாயமாக எங்களால் செய்ய முடியும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பெரும் தீமையில் இருந்து எங்களுடைய எதிர்கால சந்ததியினை காப்பாற்ற முன்வர வேண்டும் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்என்றார்.