அணு ஆயுதப் போர் மூளும் – முதன்முறையாக நேட்டோ கடும் எச்சரிக்கை; ஆபத்தின் விளிம்பில் உலகம்!

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் வெட்கம்கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg கடும் கோபம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு விளாடிமிர் புடின் ஆற்றிய உரைக்கு நேட்டோ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மிரட்டலும் விடுத்துள்ளது.

அத்துடன் உலக நாடுகளை ஆபத்தின் விளிம்பில் கொண்டு நிறுத்துவதாகவும் அவரது பேச்சு உள்ளது எனவும் நேட்டோ குறிப்பிட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவின் போக்கால் அணு ஆயுத போர் மூளும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் நேட்டோ முதன்முறையாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி, விளாடிமிர் புடினின் தற்போதைய செயல், உலக நாடுகளை அணு ஆயுத போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவு தொடரும் எனவும், அது ரஷ்யாவின் படையெடுப்பு முடிவுக்கு வரும் வரையில் நீடிக்கும் எனவும் Jens Stoltenberg தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அவசரகால ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது, இதில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ராணுவ உதவி அளிக்கும் என்றும் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin