
தந்தை அழைத்து சென்ற மகளை காணவில்லை எனவும், 2 மாதங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் பொதுமக்களிடம் தாயார் உதவி கோரியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய துஸ்யந்தன் பியூமிகா என்ற சிறுமியையே அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 08.29.2022 அன்ற யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வைத்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது, குறித்த சிறுமியுடன் அவரது தந்தையான 31 வயதுடைய சண்முகநாதன் துஸ்யந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டு, பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையை தான் அறிந்துள்ளதாகவும், தனது மகளை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சிறுமியின் தாயாரான துஸ்யந்தன் ரம்சியா கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பருத்திதுறை, ஐயங்குளம், அக்கராயன் ஆகிய பொலிஸ் நிலையங்களின் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், மீண்டு தருவதில் பொலிசார் அக்கறை செலுத்தவில்லை என குறித்த தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயம் 4ம் ஆண்டு கல்வி பயிலும் குறித்த மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 0742747603 எனும் இலக்கத்திற்கு தகவல் தருமாறு குறித்த தாயார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.