போரில் உயிரிழந்த மாணவர்கள் நினைவாக சிறுவர் தினத்தினை இரத்ததான முகாம்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம்   நேற்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 9 வது வருடமாக நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சேவையாளர் விருது ஈழத்து இலக்கிய மூத்த படைப்பாளி யோகேந்திரநாதனுக்கும் முயற்சியாளர் விருது குரு கணினி மையத்தின் உரிமையாளர் குருபரனுக்கும் கற்பித்த ஆசிரியர் விருது திருமதி தெய்வேந்திரமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் வலிகாமம் வடக்கு வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாதவன் கிளிநொச்சி வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் அனுஷ்கா பாடசாலைகளின் அதிபர்கள்  ஆசிரியர்கள் வைத்தியசாலையின் பணியாளர்கள் மாணவர்கள் குருதிக் கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin