ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து ஐ.நா கவலை

கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளது, சுதந்திரமான ஒன்றுகூடலிற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூல் தனது டுவிட்டர் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படுள்ளது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

இலங்கை அதிகாரிகள் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை மதிக்க வேண்டும். எவ்விதமான கட்டுப்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டு, தேவையாகவும் அல்லது உரிய அளவிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என  கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கருத்துச் சுதந்திரம் புனிதமானது என கூறுபவர்கள், அது அரசியல் சாசன வரைபுகளுக்குள்ளும் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin