அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது .

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் (01.10.2022) நேற்று முன்தினம் காலை 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரம் இன்றி வேறு மாவட்டத்துக்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்  மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள தருமபுரரம் பொலீசார்   22 கால்நடைகளையும் மீட்டுள்ளனர்.
ஏற்றிச் செல்வதற்கான இட வசதி ஏற்படுத்திக் கொடுக்காமை. மற்றும் கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை சான்றிதள்  இன்மை.  மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் இல்லாமல் ஏற்றிய குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்களும் தருமபுர போலீசாரால் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு  நேற்றையதினம் 02.10.2022 நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin