
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா சென்றிருக்கும் பசில் ராஜபக்ச Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் இணைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்திற்குள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் பல கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை பெற்றுள்ளமையினால் அந்த அடிப்படையில் செயற்பட ராஜபக்சக்கள் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.