
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில் நேராக பயணித்த கார் மோதியுள்ளது.
விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயங்களிற்குள்ளாகி கிிளிிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன பலத்த சேதங்களிற்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.