நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
உத்தேச புனர்வாழ்வுப் பணியக சட்டத்தின் அடிப்படையில் சாதாரண மக்களை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த அவர், புதிய சட்டம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்கவே கொண்டு வரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தேவையான பரிசோதனைக்கு முதலில் தன்னை உட்படுத்துவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
முன்னதாக இந்த சட்டமூலம் போதைப்பொருள் சார்ந்த நபர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு தேவைப்படும் நபர்களின் மறுவாழ்வுக்கான பணியகத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.