
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி வலம் வந்தார்.
தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில் ஆறாம் திருவிழாவான 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாம்புத் திருவிழாவும், ஏழாம் திருவிழா 10/10/2022 திங்கட்கிழமை கப்பல் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 12ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழாவும், 13 ஆம் திகதி வியாழக்கிழமை கப்பல் திருவிழாவும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திர தீத்த தீருவிழாவும் அன்று பிற்பகல் பட்டு தீர்த்தமும் இடம்பெறுவுள்ளது.








அடியார்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்க்கு கலாசார உடையணிந்து வருமாறு ஆலய பரம்பரை அறங்காவலர் சபை அறிவித்துள்ளது