
தருமபுரம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் (06.10.2022) இன்றைய தினம் இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் பெறுமதி மிக்க தங்க நகைகளும், நாற்பத்தி ஒன்பது ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணமும் (49500)திருடப்பட்டுள்ளது.







அத்துடன் பெறுமதிமிக்க இரண்டு தொலைபோசிகள், மற்றும் உரிமையாளரின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டு உரிமையாளருக்கோ வீட்டு தளபாடங்களுகோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படாத வகையில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் அதிகாலை எழுந்து பார்த்த போது கூரையை பிரித்தமை காணப்பட்டுளளது.
இதனால் தமது நகைகள், பணம் ஆகியவற்றை வைத்த இடத்தில் பார்த்தபோது களவாடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டு
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக டயவியல் போலீசார் தருமபுர போலீசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்