
எமது கட்சியின் தலைவர் கடந்த வாரம் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் போராளி ஒருவதற்கு உதவி திட்டம் வழங்கி வைத்திருந்தார்.
அந்த நிகழ்வில் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அதாவது எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இளைஞர்களின் கையில் எமது நாட்டின் வளர்ச்சி ஒப்படைக்க வேண்டும். என்ற நோக்கில் அம்மான் படையணி என்னும் ஒரு அமைப்பை உருவாக்க இருக்கின்றோம். அதற்குரிய தலைமை பொறுப்பை என்னிடம் அளித்திருக்கின்றார். இந்த அம்மான் படையணி என்பது உலகம் முழுவதும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது. வளர்ச்சியை பாதை நோக்கி சென்று கொண்டு வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆதரித்துள்ளார்கள் கண்டிப்பாக நமது இலக்கினை இன்னும் சில மாதங்களில் இலக்கினை அடையக் கூடியதற்கான வேலைத்திட்டத்தை கொண்டு செல்கின்றோம்.
எதிர்வரும் தைமாதமளவில் பாரிய வேலை திட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கு பகுதியிலே மேற்கொள்ள உள்ளோம் பெரும்படை ஒன்றினை கட்டி ஆண்ட எமது மூத்த தளபதி கருணா அம்மன் அவர்களின் நெறிப்படுத்தலில் படையணிகள் செய்த சாதனைகள் பல இன்று நமது இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை என்று எண்ணும் அளவிற்கு எமது நாட்டு வடகிழக்கில் சீர்திருத்தங்கள் நிறைவு செய்ய வேண்டி உள்ளது.
நமது தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது இருப்பினும் இளைஞர்களை ஒரு கவர்ச்சிகரமாக அவர்களது ஆசைக்கு ஏற்றவாறாக ஒரு கட்டமைப்பாக அம்மன் படையணி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள் வடக்கு கிழக்கு உட்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளை எல்லாத்தையும் இதற்கான நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
ஒரு கேள்வி காணப்படுகின்றது. அம்மான் படையணியின் செயற்பாடு என்ன அதன் தேவை என்ன என்று
எமது மண் மீண்டும் வளமாக்கப்பட வேண்டும். எமது கலாச்சாரங்கள் காக்கப்பட வேண்டும். சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். என்பது எமது தலைவரின் ஆணையாக காணப்படுகின்றது. கண்டிப்பாக அவர்களுக்கு எதிரான ஒரு கடுமையான நடவடிக்கை அம்மான் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்.
அவர் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றும் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது. நமது தமிழர்கள் வாழும் பகுதியில் இடம்பெறும் சீர்கேடுகளுக்கு புலம்பெயர் மக்களும் ஒரு காரணமாக அமைகின்றார்கள்.
குறிப்பாக யாழ் மண்ணில் வெளிநாட்டு பணம் என்பது இங்கே வருகிறது வருகின்றபடியினால் இங்கு இருக்கின்ற இளம் சமுதாயமானது. கட்டுப்பாடில் இருந்து போய்க் கொண்டிருக்கின்றது இதனை பெற்றோர்கள் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள் தடுமாறுவதற்கு காரணம் அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் தெரியாமல் பணத்தின் கஷ்டம் தெரியாமல் இருப்பதால் தான் அதனால் நீங்கள் பெற்றோர்கள் புலம்பெயர் தமிழர்கள் உங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் போதைப்பொருள் விடயத்தில் அரசாங்கத்தின் மீது பழியை போடுவதை விடுத்து எமது பிள்ளைகளை நாங்களே பாதுகாக்க வேண்டும் இந்த விடயத்தினை அனைத்து பெற்றோர்களும் கவனத்தில் எடுக்க வேண்டும் எமது அம்மான் படையணியினால் விரைவாக போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தில் முன் நிறுத்தப்படுவார்கள்.
இது மிக விரைவிலே முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஒரு எச்சரிக்கையாகவே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நாங்கள் சட்டத்தை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். அதாவது ஏற்கனவே யாழ் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு பணி சீருடை அணிந்து பொதுமக்களில் செயற்பட்டார்கள் அது தவறான விடயம் தான்.
எங்களுடைய இளைஞர் அமைப்பு என்பது ஒரு கிராமத்தில் ஒரு வாசிகசாலை எப்படி இயங்குகின்றதோ ஒரு நூலகம் அவ்வாறு இயங்குகின்றது. அதேபோலத்தான் அதேபோல தனது இளைஞர் அமைப்பும் செயற்பட உள்ளது அவ்வாறான ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்த உள்ளோம் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள் கிராமங்களில் போலீசாருக்கு அவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள்.
அவர்கள் போலீசாருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டார்கள். என்பதனால் இளைஞர்கள் யாரும் இந்த விடயத்தில் பயப்பட தேவையில்லை அல்லது அரசாங்கத்துக்கு எதிரான அல்லது சட்டத்திற்கு எதிரான ஒரு செயற்பாடாக இது அமையாது அரச படைகள் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாகவே எமது இளைஞர் அணி தொடர்ச்சியாக செயல்படும் என்றார்.