கம்பஹா மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில், நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள விசேட குரல் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 51 வயது தந்தை, அவரது 23 மற்றும் 24 வயதுகளையுடைய மூவரே உயிரிழந்துள்ளனர். சந்தேக நபர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு டி 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் சில மாதங்களுக்கு முன்னரே விளக்கமறியலிலிருந்து வெளியில் வந்துள்ளனர். படுகொலை குற்றச்சாட்டு ஒன்றுக்காகவே மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நிலவிவந்த நீண்டகால பகையே இந்த படுகொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக கம்பஹா சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்கரின் தலைமைத்துவத்தின் கீழ், பொலிஸ் குழுக்கள் பல விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதேபோன்று கம்பஹா குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.