இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக அத்தியாவசியமான 110 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதாக சுகாதார அமைச்சின் சர்வதேச ஔடதங்கள் குறித்த பிரதான தொடர்பாளரும் மருத்துவருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
தற்போது கையிருப்பில் இருக்கின்ற மருந்துகளை வைத்து நோயாளர்களை பராமரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.