முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கத்தால் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஒன்று  முன்மொழியப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு, உத்தேச சட்டத்தின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் நீதிவான் உத்தரவு இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், கைது செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு சுயாதீன ஆணையத்தை உருவாக்குவதையும் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் இலங்கைக்கு வெளியில் எந்தச் செயலையும் செய்திருந்தால் (அல்லது யாருக்கு எதிராக நியாயமான முறைப்பாடு, சந்தேகம் அல்லது நம்பத்தகுந்த தகவல் இருந்தால்) அவர்களை கைது செய்து, 24 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்க முடியும்.

108 பக்கங்கள் கொண்ட ஊழல் தடுப்பு சட்டமூலத்தின்படி, ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணைக்குழு, “ஒரு நபர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார், செய்கிறார் அல்லது செய்யப் போகிறார் என்று சந்தேகிக்க அல்லது நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், எந்தவொரு நடத்தையையும் இரகசியமாக கண்காணிப்பதற்கும், எந்தவொரு தகவல் தொடர்புகளையும் பதிவு செய்வதற்கும் நீதிமன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த சட்டமூலத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகள் பற்றிய தனிப் பிரிவு உள்ளது.

இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடுமாறு பொது அதிகாரிகளை, சட்டம் கட்டாயப்படுத்த முடியும்.

ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும் மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு (CES) மூலம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

குற்றங்களைப் பொறுத்தவரை, சட்டம் தனியார் துறை உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது. சட்டமானது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது, அத்துடன் தண்டனையானது, 200,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin