
வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது

வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த லண்டப பூசைகள் மதியம் 3:00 மணியளவில் ஆரம்பகமாகி 3:45 மணியளவில் வசந்த மண்டபத்திலிருந்து வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே செல்ல உள்வீதி சுற்றி பின் கற்கோவளம் சமுத்திரத்தில் சக்கரத்து ஆழ்வாருக்கு சமுத்திர உற்சவம் இடம் பெற்றது.






நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ இடம் பெற்ற வல்லிபுரத்து ஆழ்வாரின் சமுத்திர உற்சவம் சிவாச்சாரியர் கணபதீசுவரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு பூசைகளுடன் சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெற்றது.
பல அடியார்கள் தூக்குக் காவடி, பாற்காவடி நேற்றிகளையும் நிறைவேற்றுனர்.
மக்களுக்கான குடிநீர் மற்றும் கழிவகற்றல் வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பினை பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொலீசார் பொது உடையிலும் சீருடையிலிம் கடமையில் ஈடுபட்டதுடன், இலங்கை செஞ்சிலுவை சங்கம், இலங்கை முதலுதவி சங்கம், சாரணர் உட்பட்ட தொண்டர் சேவை நிறுவனங்களும் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபட்டதுடன் வடமராட்சி தனியார் பேருந்து சேவைச்சங்கம், பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளையும் செயதிருந்தனர்.