மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறியுள்ளதாவது,
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதேபோல கொன்சியூலர் பிரிவு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்கள நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தன்னுடைய நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி அதனை மீள ஒரு ஒழுங்கு முறையில்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பிற்பாடு ஆரம்பிக்கக் கூடிய செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம்.
எனவே பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மாத்திரமே மாவட்ட செயலகத்திற்கு வருகை தர வேண்டும்.
மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப்பயிற்சி என்பன தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த மோட்டார் திணைக்களத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து பிரிவினை தொடர்பு கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அந்த பதிவின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஏற்கனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவதியுராது மிக மிக அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்.மாவட்ட செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.