
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பணவீக்க நிலைமை கிரமமாக குறைவடையும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மின்சாரம், நீர் மற்றும் பெறுமதி சேர் வரி என்பனவற்றினால் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்தது.
எனினும் எதிர்வரும் நாட்களில் பணவீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடுமையான நிதிக் கொள்கைகள் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு பணவீக்கம் படிப்படியாக குறையும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.