வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்கள் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு இலங்கை வருபவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை.
என்ற போதும், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள், பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத போதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.