இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் 156ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலீஸ் வாரத்தினை முன்னிட்டு சம்பூர் பொலீசாரினால் மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 5000/- ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 11மணியளவில் வீரமாநகர் சுவிசேச ஐக்கிய திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் அத்துல சிறீவர்த்தன குடும்பத்தினரின் நிதியனுசரனையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மூதூர் உதவிப் பெலீஸ் அத்தியட்சகர் நிசங்க கொட முல்ல, சம்பூர் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி Swj துசார, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் Im நஃபீஸ், ஆகியோருடன் போலீஸ் உத்தியோகத்தர்கள், நிதியனுசரனையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், போன்றோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.