டிஜிட்டல் அடையாள அட்டை செயற்திட்டத்தில் 266 கோடி ரூபா வீண்விரயம்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் பேரில் 266 கோடி ரூபா பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்பு நடைமுறையில் இருந்த அடையாள அட்டைக்குப் பதில் புதிய டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டையொன்றை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பதவிக்காலத்தில் 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

செயற்திட்டத்தின் மொத்த செலவீனமாக எட்டு நூறு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதுடன் இரண்டு வருடங்களுக்குள் செயற்திட்டத்தை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் 16 வருடங்கள் கடந்த நிலையிலும் செயற்திட்டம் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 266 கோடி ரூபா அநாவசிய செலவினங்கள், வாகன கொள்வனவு மற்றும் பயிற்றுனர்களுக்கான சம்பளம், ஊழியர்களுக்கான பயிற்சி என்று பல்வேறு வழிகளில் செலவிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை செயற்திட்டத்திற்கான தொழில்நுட்ப உபகரணங்கள் எதுவும் இதுவரை கொள்வனவு செய்யப்படாத நிலையிலும் அதற்கான பயிற்றுனர்களாக எட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வருடாந்தம் பத்து கோடி வரையான ஊதியத்தை கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் எதுவித பணியும் இன்றி பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறாக டிஜிட்டல் அடையாள அட்டை செயற்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி அந்த திட்டம் பூர்த்தி செய்யப்படாமலேயே முற்றாக செலவிடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin