இலங்கையில் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் தேயிலை உற்பத்தி 20 வீதம் என்ற அளவில் 171.4 மில்லியன் கிலோவாக குறைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சீர்குலைவுகள் காரணமாக, தேயிலை வகையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தியாவுக்கு பாரிய நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

1996 இலங்கையில் 169.7 மில்லியன் கிலோ உற்பத்தி செய்யப்பட்டது. அண்மைய ஆண்டுகளில், இலங்கையில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டன.

அத்துடன் 2022 ஆம் ஆண்டில் எரிபொருள் மற்றும் உரங்களின் பற்றாக்குறையால் இந்த சரிவு அதிகரித்து, உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 16 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin