2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சிக் கணிப்புகளில் தரமிறக்கம் ஏற்படும் என சர்வதேசநாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதன்படி, முந்தைய எதிர்பார்ப்புக்கு மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 சதவீதமாக இருக்கும்.
2027ஆம் ஆண்டளவில், அது 3.7 வீதமாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதம் என்றும், 2023ல் அது மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என உலக வங்கி, தனது கண்ணோட்டத்தில் கணித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் 8 வீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை வளர்ச்சி காணப்பட வாய்ப்பில்லை என்றும் இலங்கை மத்திய வங்கி தனது முன்னறிவிப்பில், ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகளாவிய வளர்ச்சி 2021 இல் 6.0 சதவீதத்திலிருந்து 2022 இல் 3.2 சதவீதமாகவும், 2023 இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தைத் தவிர, 2001ஆம் ஆண்டிலிருந்து பலவீனமான நிலை தொடர்வதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.