
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த மாணவன் தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தான் நலமாக இருப்பதாக மாணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார்.
எனினும், தான் எங்கிருக்கின்றேன் என்பது பற்றிய விபரங்களை அவர் கூறவில்லை என பெற்றோர் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவர் விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த பொறியியல் பீட மாணவரைக் காணவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் குறித்த மாணவன் வீட்டாருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.