
கனடாவின் ரொறென்ரோ மார்க்கதம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரியும் சகோதரனும் என தெரியவந்துள்ளது.
ரொறன்ரோ மார்க்கம் வீதியில் நேற்று பிற்பகலில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்புக்கு அண்மையில் கனரக வானம் ஒன்று குறித்த இளையோர் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாழ்பாணத்தின் சுதுமலையை பூர்வீகமாககொண்ட சகோதரியும் சகோதரனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.