யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட மக்கள் மிக எச்சரிக்கையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கிற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக மிக மிக அவசிய தேவைகளுடைய பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டினை மூன்று வாரங்களுக்கு
நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடைமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்தோடு பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.
தற்பொழுது வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் உணர்ந்து தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக தற்போது புதிய வழிகாட்டலின் படி
வழிபாட்டிடங்களில் ஒன்று கூடுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய குடும்ப நிகழ்வுகள் திருமண நிகழ்வுகள் போன்றவையும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே புதிய சுகாதார நடைமுறையினை பொதுமக்கள் பின்பற்றி வீடுகளிலிருந்து தேவையில்லாது வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.