
பருத்தித்துறை ஹற்றன் நேஷனல் வங்கியால் கொரோனா பெருந் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய உற்பத்தியாளர்கள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நேற்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பருத்தித்துறை ஹற்றன் நஷனல் வங்கியில் கிளை முகாமையாளர் வீரசிங்கம் கரிதரன் தலமையில் இடம் பெற்றது.


இதில் வட மாகாண தலமை வியாபார முகாமையாளர் கருணாராஜ் நிசாந்தன், வடமாகாண நுண்கடன் நட்புறவு முகாமையாளர் செல்வராசா செந்தூரன், பருத்தித்துறை நுண் கடன் நட்புறவு முகாமையாளர் யோகநாதன் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நன்கொடைக்கான காசோலையை வழங்கிவைத்தார். இது ஹற்றன் நசனல் வங்கியின் மூன்றாவது தடவையாக வழங்கப்படும் உதவியாகும்