
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனத்தில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த சகாயதாசன் பவா வயது -36 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கடலுணவு நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், வாகனத்தை அங்கிருந்து எடுக்க சிலர் முற்பட்டதனால் பதற்றநிலை ஏற்பட்டது.
அதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து பதற்றநிலை தணிந்தது.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.