கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும், அதனை அண்டிய
பிரதேசங்களிலும், இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை
தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே
அச்சுறுத்தலுக்கு எதிராக முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக விவசாயிகளையும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகின்ற இரணைமடு குளத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில்
தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றவர்கள்.
இது தொடர்பில் அதிகாரிகள், பொலீஸார், இராணுவம், ஆகியர தரப்பினர்களுக்கு
தகவல்களை வழங்கியும், ஊடகங்கள் ஊடாக தகவல்களை வெளிக்கொண்டும் வந்தும்
இதுவரை சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மாறாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள்.

தொடர்ச்சியாக இச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருவதோடு, அதற்கு எதிராக செயற்படுகின்றவர்களை தாக்கியும், அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றமை குறிப்பிட தக்கது.