
மோட்டர் சைக்கிள் ஒன்றினை திருடி அதில் சென்று பாடசாலைக்கு பிள்ளைய அழைத்துச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சஙகிலியை அறுத்த நபர்கள் இருவர் செய்யப்பட்டுள்ளதுடன், 5.5 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.




குறித்த மோட்டர் சைக்கிளுடன் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்லதாகவும் அது தொடர்பாகவும் குறித்த நகை திருட்டு சந்தேக நபர்களிடம் இசாரணைகள் இடம் பெற்று வருகின்றதுடன்
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலீசார் அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மாடு ஒன்றினை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் சான்றுப் பொருட்களும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும், குறித்த நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் வடமராட்சி பகுதியில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.