
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த வீரக்குட்டி சின்னம்மா என்பவர் மிக நீண்ட காலமாக தனது மகனைத் தேடியலைந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் மரணமடைந்துள்ளார்.
அன்னாரது மகனான அகிலன் என்றழைக்கப்படும் வீரக்குட்டி விக்கினேஸ்வரன் 2006 ஆம் ஆண்டு மூதூர் பச்சைநூர் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இவரை பல ஆண்டுகளாத் தேடியலைந்த இந்தத் தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சக்கர நாற்காலியின் உதவியுடன் தனது வாழ்வின் இறுதி நாட்களை களித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது மரணத்துடன் இதுவரை 300 பேர்வரை தமது பிள்ளைகளைத் தேடி தேடி களைத்த நிலையில் மரணமாகியிருக்கிறார்கள். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.