கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பில் உள்ள நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களாவர்.
அவர்கள் சந்தையில் இருந்து எல்லாவற்றையும் வாங்க வேண்டியிருப்பதால், நாட்டின் பணதேவையை அவர்கள் அதிகம் உணர்கிறார்கள்.இதனால் வாழ்க்கை சுமையை தாங்க முடியாமல் அவர்கள் கிராமப் புறங்களுக்கு நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பில் உணவுப் பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்துள்ளது. சந்தையில் விறகுத் துண்டில் இருந்து சகல பொருட்களையும் கொள்வனவு செய்து கொழும்பில் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளதாக வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களையே இந்தப் பிரச்சினை பாதித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.