
கோப்பாய் நிருபர்.
கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.
மருத்துவர் ஒருவர் தனது வாகனத்திற்க்கு மேலதிக ஒதுக்கீட்டு வசதி ( recerve tank) இல்லை என்றும் இதனால் தனது ஐந்து லீற்றர் பெற்றோலில் ஒன்றரை லீற்றர் பெற்றோலை போத்தல் ஒன்றில் தருமாறும் கோரியுள்ளார். இந்நிலையில் அவ்வாறு தமக்கு அதிகாரம் இல்லை என்று மறுத்துள்ளார். இதே வேளை பல வாகனங்கள் இடை நடுவில் எரிபொருள் இன்றிய பல வானங்கள் அந்தரித்த போதும் இவ்வாறு போத்தல்களில் எரிபொருள் வழங்காது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க உரிய வாகனத்திற்க்கு உரிய QR இன்றி வேறு வாகனங்களுக்கு எவ்வாறு எரிபொருள் நிரப்ப முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.