
பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.
மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண சம்பளம் பெறுவதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பல ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தன்னார்வ ஒப்பந்தங்களை மேற் கொண்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த அசாதாரண சம்பள கொடுப்பனவுகள் அரச சேவையில் உள்ள சில ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.