பதவிக்காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரண்டவரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த யோசனை நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதற்கான உறுதிமொழி அவசியம் என அளுத்கமகே ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, வெற்றிலை கையுடன் வந்து வணங்கி நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரினாலும், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தமது கட்சி எதிர்ப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் அதனை தான் முன்நோக்கி கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.