
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கடந்த 6. 10 .2022 அன்றைய தினம் கிராமசேவையாளர் மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர்” சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



அதற்கு பதிலாக 19 10 2022 நேற்றைய தினம் 250க்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் கண்டாவளை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன். கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் தமது பகுதியில் சேவையாற்றி வரும் கிராமசேவையாளர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் இருவரும் கடந்த கொரோனாகாலத்திலும் கூட இரவு பகல் பாரமல் சேவையாற்றியதாகவும். தற்போதைய நிலைமையிலும் மக்களுக்காக பாரபட்சமின்றி கடமையாற்றி வருவதாகவும். ஒரு சிலர் தமது சுயலாபம் கருதி கடந்த 6ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்ததாகவும். இருப்பினும் அவர்கள் கூறிய பல விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிரதேச செயலர் பாரபற்சமின்றி விசாரனைகளை மேற்கொண்டு உரியதீர்வினை பெற்றுத்தரவேண்டும்,எனதெரிவித் தனர்,