
நாட்டில் அடுத்துவரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளதாக கனியவள தேசிய சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில் உள்ளதாகவும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.