இலங்கையில் இணைய சுதந்திரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப் பகுதி தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனநாயக கண்காணிப்பு சுதந்திர அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பின்வரும் வழிகளில் இணைய சுதந்திரம் முடக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் அரசாங்கம் சமூக ஊடகங்களை சொற்ப காலத்திற்கு முடக்கியது இணைய செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலித் தகவல்களை வெளியிடுவோருக்கு தண்டனை விதிக்கும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறெனினும் டிஜிட்டல் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இணைய சுதந்திர சுட்டி நூற்றுக்கு 48 என பதிவாகியுள்ளது.