எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சீர்திருத்த செயற்பாடுகளுக்கும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை செல்லும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத் தேவையான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.
அதன்படி, நான்கு ஆண்டுகளில் 400 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.