கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்வான கிருஸ்ணர் நரகாசுரனை அழித்த நரகாசுர வதம் நேற்று இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த நரகாசுர வதம் ஏ9 வீதி ஊடாக, மயிலாட்டம், உயிலாட்டம், பொம்மலாட்டத்துடன் சூரன் வலம் வந்தார்.
பிள்ளையார் கோவில் முன்பாக நரகாசுரன் வந்தடைந்ததும், கிருஸ்ணரும் வருகை தந்தார். இதன் போது போருக்கு தயாரான நிகழ்வு பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம்பெற்றது.
தொடர்ந்து, கிளிநொச்சி நகர் ஊடாக வலம் வந்து பின்னர் கிருஸ்ணர் ஆலயம் சென்று அங்கு நரகாசுர சங்கார நிகழ்வு இடம்பெற்றது.