இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 25) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 71 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 26 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 421 ரூபா 38 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 405 ரூபா 38 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 368 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 353 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.