வல்வெட்டித்துறை சமுர்த்தி வங்கியில் பணியாளர் ஒருவருக்கு கொரோணா தொற்று நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வங்கியை முடக்கவோ அல்லது தொற்று நீக்கமோ எதுவும் மேற்கொள்ளாமல் வங்கியின் வழமையான பணிகள் இடம் பெற்று வருவதாக மக்கள் வழங்கிய தகவலை அடுத்து வங்கி முகாமையாளருடன் தொடர்பை ஏற்படுத்தி குறித்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக குறித்த ஊடகவியலாளர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய போதே குறித்த வங்கி முகாமையாளர் குறித்த ஊடகவியலாளரை மிரட்டியுள்ளார், உன்னை தூக்கி உள்ளே போட்டிருக்க வேண்டும், தன்னை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்ச்சியாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு அவ் ஊடகவியலாளர் அவ்வாறு உங்களுக்கு அச்சுறுத்தல் யாராவது விடுத்திருந்தால் நீங்ஙள் காவல்துறையில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் °நான் உங்களிடம் எனது பெயர் குறிப்பிட்டு நாகரீகமாக பேசினேன். நீங்கள் ஏன் குழப்பமடைகிறீர்கள் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளித்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு பதிலளிக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
குறித்த வங்கி முகாமையாளர் ஏன் குழப்பமடைந்தார்? எதற்காக இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டார்?
வங்கியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வங்கி முடக்கப்படலாம? தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டுமா என வினாவுவதற்க்காக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு குறித்த வங்கியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கேட்டபோது அதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஊடகவியலாளரால் தொற்று நீக்கம் செய்யாமல் வங்கிக்கு செல்வது தொடர்பில் கேட்டபோது தனக்கு இதற்கு பதிலளிக்க முடியாது என்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் உங்களிடம் மக்களால் இவ்வாறான தகவல்கள் ஆலோசனை பெறமுடியாத என்ற கேள்விக்கு சுகாதார திணைக்களத்தின் பதில் என்ன…??
இதே வேளை குறித்த வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் தொற்றுநீக்கம் கூட மேற்கொள்ளாமல் பணியில் ஈடுபடுவதால் தமக்கும் தமது குடும்பங்களுக்கும் கொரோணா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பணியாற்றுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர்கள் பலரும் எம்க்கு தெரிவித்தனர்